பிச்சை புகினும் புசி!
விடிந்தாலும்!
அடைந்தாலும்!
உண்டு உறங்கி!
எழுந்தாலும்....!
உண்கிறேன்.. உண்கிறேன்..!
பசியோடு நாளும் உண்கிறேன்..!
உண்டது செரித்து மீண்டும்!
பசிக்கும் வயிற்றுக்கு தேடி அலைந்து!
உண்கிறேன் ..!
இப்போது என்னோடு ..!
என் மனைவியும் பிள்ளைகளும்...!
அடங்காத பசிக்கு!
தீனி தேடி அலைந்தே ...!
தீர்ந்து போனது ..!
என் வாழ்நாள்!
என் பசி மட்டும்!
இன்னும் தீராமல்
பாரதிமோகன்