மொட்டின் சத்தம்!
இதழ்களில்!
கேள்வியாய் வெடித்தால்தான்!
இயற்கையின் இயல்பே அர்த்தப்படும்...!
மலர் பிறப்பைப் பத்திரப்படுத்தி!
தொடர்ந்து வரும் வித்தில்!
கேள்விகளை விதைப்பதால்தான்!
முளைகள் கேள்விக்குறியாயின..!
கேள்விக்கும்!
முளைக்கும் வித்துக்கும!
மூளைமனிதன் போட்ட முடிச்சு இது..!
--கண்ணப்பு நடராஜ்

கண்ணப்பு நடராஜ்