தமிழா ! நீ அழவேண்டாம் - நிர்வாணி

Photo by Julian Wirth on Unsplash

தமிழா !!
நீ அழவேண்டாம்!
எதற்காக அழவேண்டும் ?!
எல்லாம் இழந்துவிட்டாய்!
உலகத்தின் மூலைகளில் அகதியாய்!
ஒதுங்கியும் விட்டாய்!
இனிமேலும் எதற்காக அழவேண்டும்?!
“தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா“ !
பாடியவனும் உயிரோடில்லை!
தலை நிமிர்ந்து நிற்க தலைகளே இல்லாமல்!
எத்தனை தமிழர்!
சுற்றம் சேராமல் ஒப்பாரியுமில்லாமல்!
அழுகல் பிணங்களாய்
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.