01.!
நசிகேதன் அக்னி..!
--------------------------!
முன்னையிட்டதும்.,!
பின்னையிட்டதும்.,!
அன்னையிட்டதும்.,!
என்னையிட்டதும்...!
மண்ணில் பிறந்ததும்.,!
மண்ணை பேர்த்ததும்..!
தீக்குள் நுழைந்ததும்..!
மண்ணில் புதைந்ததும்..!
எந்தன் செயலல்ல..!
மந்தன் செயலதோ..!
சந்தேகங்களை!
தேகம் சுமப்பதோ..!
மண்ணை ஆளவும்.,!
விண்ணை ஆளவும்!
அஸ்வமேத யாகப்!
பெண் பொம்மை போதுமே..!
உந்தன் யாகத் தீ..!
என்னை ஆ(க்)குதீ...!
நீ நிறை சொர்க்கம் ஏக!
நான் நசிகேதன் அக்னி..!
02.!
தீட்டு!
---------------!
பாத்ரூம் போனால்!
காவலாய் சத்தகம்..!
படுக்கை பக்கம்!
தடுப்பாய் உலக்கை.!
தலைக்குக் குளித்தாலும்!
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி!
தனித்தட்டு., தனி டம்ளர்..!
தனி நாடு கேட்காத!
எனக்கு தனியிடம்..!
துண்டு நிலம்..!
தோல் தலையணை..!
கிணறு வற்றிவிடும்.,!
செடி பட்டுவிடும்..!
ஊறுகாய் கெட்டுவிடும்.!
கருப்பை சூல் சுமக்க!
மகரந்தம் பக்குவமாக்கும்!
பருவத்தின் சுழற்சி இது,..!
சாமி படைத்த என்னை!
மறைக்க சாமிக்கு!
ஏன் திரைச்சீலை..!
பின் குழந்தைகளோடு!
இருக்கும் கடவுளர்கள் மட்டும்!
எப்படி தீட்டுக்களற்று
தேனம்மை லெக்ஷ்மணன்