காலத்தோடு நான் - நிர்வாணி

Photo by engin akyurt on Unsplash

ஊருக்குப்போய் வந்து !
தை பிறந்தால் !
ஒரு வருடம் !
தை பிறந்தபோதுதான் வருடம் போனது !
தெரிந்தது !
இப்படித் தெரியாமல் !
காலம் ஓடுவதை !
பல நிகழ்வுகள் அப்பப்ப !
சொல்லித்தான் போகும் !
மழலைச் சிரிப்பு ததும்ப !
மாமா மாவென்று !
காலைச் சுற்றிவந்த !
சின்னப்பொடியன் !
'உங்களுக்கு ஒண்டும் தெரியாது !
இலாவகமாய் சொல்லிப்போக !
மண்டையில் உறைத்தது !
சந்தடியில்லாமல் ஓடிச்சென்ற !
ஐந்து வருடம் !
-- நிர்வாணி
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.