என் குழந்தைகளுக்குள் வக்கிரங்களை !
விதைத்த போரே தொலைந்துபோ !
மாமனிதர்களைக் காவுகொண்ட போரே !
மறைந்துபோ !
சோலைகளுக்குள் உல்லாசமாய் !
பாடி மகிழ்வித்த குயிலையும் சோலையையும் !
அழித்துவிட்ட போரே ஓடிப்போ !
இன்பமாய் வாழ்ந்த என் மக்களின் முகங்களை !
கண்ணீரால் கழுவிய போரே காணாமற்போ !
வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வேண்டும் !
எங்களின் ஒவ்வொரு வீட்டிலும் !
சோகத்தைப் பொறித்துவிட்ட போரே !
அழிந்துபோ !
இன்று எங்களின் சுடுகாடுகளிலும் !
புல் முளைத்திருக்கிறது !
வீடுகளையே சுடுகாடாக்கிய போரே !
மரணித்துவிடு

நிர்வாணி