4 கவிதைகள் - நிர்வாணி

Photo by Amir Esrafili on Unsplash

1. !
வயோதிபன் தீட்டிய சித்திரத்தில் !
அவனின் கைநடுக்கம் !
நிதர்சனமாய் !
அந்தி வானில் தெரிந்தது !
2. !
கண்டும் காணாமல்ப் போகும் !
மனிதர்களின் பின்னால் போகும் !
எல்லைகளில்லாத என் !
சிந்தனை !
3. !
காலையில் பார்த்தேன் !
எனக்காக ஒரு புன்னகை செய்தாள் !
எவன் கண் பட்டதோ !
மாலையில் மானமுள்ளவள் !
மரணித்துவிட்டாள் !
முள்ளோடு பிறந்த !
சிகப்பு ரோஜா!
!
4. !
என் உடலென்ன !
சுமைதாங்கியா ? !
அவளின் இதயமும் என்னிடமல்லவா !
இருக்கிறது
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.