“சராஜிவோ“ வில் கொல்லப்பட்ட !
காதலர்களுக்காக இவர் அழுகிறார் !
கவிதை எழுதுகிறார் !
இவர் வாழுகின்ற இதே தளத்தில் !
என் மக்கள் கொல்லப் படும்போது !
ஆனந்தமாய் ”பெரேரா” கொண்டாடுகிறார் !
ஏன் ? !
இறந்து போனவரெல்லாம் மனிதராகத் !
தெரியவில்லையா ? !
தமிழரென்பதால் மனிதரில்லையா ? !
இன்று புரிகிறது !
எப்போதோ எங்களின் பழசுகள் சொன்னது !
இக்கரையில் ஏதோவொன்றுக்கு !
அக்கரை பச்சையாம்

நிர்வாணி