உயிரின் அடிநாதத்தில் எழுகிறது!
உனக்கான கூக்குரல் -!
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை!
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;!
தோல்வி நெருங்கிடாத உன் !
ராஜா பாட்டையில் -!
ஒரு வெற்றி குறுக்கிட்டு!
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;!
எதிரியின் உறக்கத்திலும் -!
உயிர் தைக்கும் மரணபயத்தை !
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் - அதை!
காலம் தின்று வரலாறு பேசுகிறதே - வருத்தமில்லையா;!
இரண்டில் ஒரு கால் இழந்தும் !
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி!
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை!
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???!
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு!
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;!
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் -!
உன் நினைவுகளால் உன்னை -!
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்!
வரலாற்றில் இருக்கட்டும்;!
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்!
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;!
ஒரு சபதம் புரி;!
என்று வரை ஈழ காற்று வீசுமோ!
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ!
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ!
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ!
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே!
உயிர் பூண்டிருக்கும்;!
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்!
சொட்டிக் கொண்டே இருக்கும்
வித்யாசாகர்