ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளோடு!
உறங்கி!
இனிய கனவுகளோடு விழிக்கிறேன்!
அல்லும் பகலும் ஏன் என் இதயத்தில் நீ!
காதல் ??!
எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்!
ஏன் நீ மட்டும் புரியாமல்!
என் இதயத்தைக் கிழிக்கிறாய்!
ஓ ! என் இதயத்துள் உன்னைத் தேடுகிறாயா?!
சரியென்று புன்னகையோடு தலையசைத்துவிடு!
சிரித்துக்கொண்டே செத்துப்போய்விடுகிறேன்!
ஏனெனில் காதல் என்றோ ஒரு நாள்!
என்னையும் கொல்லுமென்று காதல்!
வரலாறு சொல்லித்தந்ததால்
நிர்வாணி