கனவு காணுங்கள் - இராஜ. தியாகராஜன்

Photo by Jan Huber on Unsplash

அவை வணக்கம் (கட்டளைக் கலித்துறை)!
நெகிழ்ந்தே எமதரும் கன்னற் றமிழால் நிறைஞரவர்;!
இகம்புகழ் பாக்களைப் பாட மகிழும் *அருளரசன்;!
தகவான சிந்தனைப் பூவதால் பாமாலை தந்திடுவேன்;!
அகமகிழ்ந் தேற்றிட வேண்டுமிவ் வன்பி னரங்கினிலே!!
!
கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)!
-----------------------------!
நாற்றிசையும் ஆள்கின்ற நம்பரிதிச் செம்படராய்!
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்!
சீர்த்தியொளி பாய்ச்சிநலஞ் சேர்த்திடவேக் கீழ்த்திசையில்!
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!!
!
சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ!
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்!
சுற்றிநிலங் காடுமலை வழ்ந்திருக்கும் பேராழி!
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!!
!
மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்!
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே!
சிந்தனையை ஓர்முகமாய்த் தேர்ந்தழகாய் வாழ்கையிலே!
விந்தையென ஆறறிவால் மேன்மையுற்ற இந்தியர்நாம்;!
!
மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு!
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்!
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா நம்கலாமும்!
தாழ்விலாத தன்னுரையாய்த் தந்திடுவார்? இல்லையில்லை!!
!
நீணிலத்தில் காணுகின்ற நேரறிவை நம்வாழ்வில்!
வாணுதலின் நங்கையவர் கல்வியதை நம்வாழ்வில்!
தேநிகர்த்த நந்தமிழின் மேன்மையதை நம்வாழ்வில்!
கானகத்துக் கல்வியினை கற்பதையே நம்வாழ்வில்!
!
ஒன்றெனவே வாழ்ந்திருக்கும் ஒற்றுமையை நம்வாழ்வில்!
எண்ணறியா நூல்களுறை நுண்ணறிவை நம்வாழ்வில்!
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து!
அண்டவெளி மண்டலத்தை ஆள்வதையே நம்வாழ்வில்!
!
ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;!
ஏற்றமது வாழ்க்கையிலே எத்தனையோ தந்தாலும்!
தூற்றுதலும் பாதையிலே சேறெனவே வந்தாலும்!
தேர்ந்தெடுத்த நேர்கனவை சீர்கனவாய் போற்றுவமே!!
இவண் அன்பன்
இராஜ. தியாகராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.