ஒரு வேண்டுதல் - கவிதா. நோர்வே

Photo by Maria Lupan on Unsplash

மண்ணை உண்ட கண்ணனாம்என்று ஆடிப்பாடியே!
தம் கலைவாழ்வை முடித்துக்கொண்டனரே!
அவர்களுக்காகவாவது!
கண்ணா....!
தவழ்ந்தேனும் போய்!
வன்னி மண்ணில்!
மண் உண்டு!
வாழ்தல் பற்றி!
சொல்லி கொடேன்!
அப்படியே!
உன் மைத்துனன்!
சிவனிடம் போய்!
இடுகாடுகளில் ஆடிப்பாடி!
வாழ்தல் பற்றி!
என் மக்களுக்கும்!
எடுத்துரைக்ச் சொல்லு!
எங்கே அவன் யேசு?!
உயிர்த்தெழும் கலைபற்றி!
வெளியிடாத குறிப்புகளை!
என்னதான் செய்தான்!
கேள்..!
அவன் புத்தனிடம்!
குருத்திக் காட்டிலும்!
மரத்டியில்!
குத்துக்கல்லாய் இருப்பது பற்றி!
அவன் முகம் கொடுத்தால்!
கேட்டு வா!
முகமதுவும், அல்லாவும்!
மூடிகொண்டு போயிருப்பர்!
பள்ளி அரங்குகளில்!
பர்தா போட்டும் படுத்திருபர்!
உங்களைப் பொருத்தவரை!
கலிகாலம் வரவில்லை!
தொந்தரவுக்கு மன்னிக்கவும்!
ஆண்டவரே!!
கைகட்டிச் சிரிப்போடும்!
செல்வச் செழிப்போடும்!
பூவும் புஸ்பமுமாய்!
குந்தியிருங்கள்!
குத்தவைச்சு.!
சில்லறைப் பயல்களா...!
!
21.04.2009
கவிதா. நோர்வே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.