பிறந்த நாள்!
கொண்டாடுகிறது காலம்!
மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து!
அதன் கை குலுக்கி!
வாழ்த்துச் சொல்லுங்கள்.!
அதைக் கொடு!
இதை நிறைவேற்று!
என்று காலத்திடம்!
கவிதையில் கோரிக்கை வைத்து!
சலித்து விட்டது எனக்கு.!
கேட்பதற்கு மிச்சம்!
ஏதும் இருக்கிறதா!
இங்கு...?!
மீண்டும் மறப்பதற்கு!
வசதியாக தள்ளுபடி விலையில்!
ஒரு புத்தாண்டு உறுதி மொழி!
கேட்டுப் பார்க்கலாம்.!
மீண்டும் எங்கோ!
ஒரு மூலையில்!
நிகழப் போகும்!
வன்முறையின்!
பல ரூபங்களை!
என்றோ சொந்த ஊருக்கு!
வரும் போர் வீரனை போல!
சந்திக்க எழுகிறது காலம்!
நம்பிக்கையை மட்டும்!
தனது வடுக்களில்!
மருந்தாய் பூசியபடி!
எங்கு செல்கிறாய் நண்பா!
மகிழ்ச்சியை எடுத்துக்கொள்!
காயப்படும் முன்!
மீண்டும் பிறந்த நாள்!
கொண்டாடுகிறது காலம்
s.கிருஷ்ணன்