1.எல்லா மனிதர் பற்றிய குறிப்பு!
பார்த்த மனிதர்களைப்பற்றி!
எந்த மனிதரிடமுமில்லை!
எல்லா மனிதர் பற்றிய குறிப்பும்!
எல்லா மனிதரிடமும் இல்லை!
எல்லா மனிதர் பற்றிய!
எல்லாமும்.!
அவரவர் வயிறும்!
அவரவர் உலகமும்!
தனித்தனி யென்றான்!
என்றோ கண்ட யாரோ ஒருத்தன்!
தனித்தனியாகவே யிருக்கிறது!
எல்லோர்க்கும் வயிறு!
அவரவர்க்கான உலகமாய்!
இன்னும் எதுவுமோவாய்!
!
2.வளையம்!
அப்படியே இருக்கட்டும்!
இந்த வெளியும் குறுகலும்!
யாரும் வரவில்லை!
இந்த அகாலத்திலும்!
பனைகளின் இடையே!
நெளியும் ஒழுங்கையில்!
இன்னும் மணந்து கொண்டேயிருக்கிறது!
தினவடங்காக் கலவரமும்!
நிகழ்ந்து கொண்டிருக்கும்!
சாவும்!
வெளியேறிச் சென்றவர்கள்!
திரும்ப முடியாத இடத்தில்!
தரித்திருக்கக் கண்டேன்!
விட்டுச் சென்ற வார்த்தைகள்!
திரும்பி வர விடவில்லை ஒருபோதும்!
யாரையும்!
அந்த வார்த்தைகளிலிருந்து!
கடக்க முடியாத பெரும் சுவர்களில்!
படர்ந்திருந்தன!
முட்செடிகள்!
- கருணாகரன்
கருணாகரன்