சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள் !
அதி பயங்கரமாகவும் !
சாவகாசமாகவும் !
வளர்ந்து செல்கின்றன !
என் து£க்கத்தினூடும் !
விழிப்பினூடும். !
!
ஞாபகங்கொள்ள முடியாத !
பூச் செடிகளில் !
யாரோ விட்டுச் சென்ற !
புன் சிரிப்பின் மீது !
இரத்தத் துளிகளின் நடனம் !
பாம்பின் நனினத்தோடு. !
காதருகில் அச்சமூட்டும் !
இரகசியங்களைச் சொல்லும் எதிரி !
அழைத்துச் சென்ற விருந்தில் !
எதிர்பாராத விதமாகக் கண்டேன் !
கிறிஸ்துவை. !
தலை கவிழ்ந்தபடியிருந்தார் அவர் !
தியானமா அவமானமா !
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம் !
பன்னூறு ஆண்டுகால !
தோல்வியின் நிழலைப் பிரதிபலிக்கும் !
அந்த விழிகளில் !
சகிப்பின் கடைசிக்கணம் !
முடிவதைக் கண்டேன். !
-கருணாகரன்
கருணாகரன்