இனியொரு பிறவி வேண்டாம்.. முத்துத்தமிழ் கொல்வோன்!
01.!
இனியொரு பிறவி வேண்டாம்!
--------------------------------------------!
நீலவண்ணமதில் ஆயிரம்தாரகை!
நீந்திட எங்குமொளிப் பிழம்பு!
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்!
காற்றில் சிவப்பொளி மஞ்சளுடன்!
ஊதாக் கடும்நீலம் உள்ளதென அண்டம்!
உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்!
காது ஓம் என்றொரு ரீங்கார ஓசையில்!
காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்!
சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்!
தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ!
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத் !
துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர!
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு!
நீலக்கரும்குழி தானுறிஞ்ச!
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகிறேன்!
சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்!
காணும்பகற்கன வாலெழுந்து மேலே!
வானிற் பறக்கும் முகில்களினை!
ஆளாய்க் குரங்காய் அழகென்று பெண்ணாக!
அற்புதமான வடிவெடுக்கும்!
மீளக் கலைந்து உருக்குலைந்துபஞ்சாய்!
மெல்லிய மேகம் பறந்துசெல்லும்!
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே!
தேவதையொன் றெழில் வானில்வந்தாள்!
அந்தோஅழகிய தேவதையே வெண்மை!
ஆடைகள் பூண்ட எழிலரசி!
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த!
மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்!
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்!
எங்குசென்றே அமைதி கொள்வேன்!
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்!
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன!
வானோ பிரபஞ்சமாய் ஆக்கிவிரித் ததில்!
வண்ணக் குழம்புகள் வைத்தது யார்!
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்!
காரணமென்ன அறிந்துளயோ!
ஆவிதுறந் ததும்அண்ட வெளியினில்!
நாம்போகு பாதையோர் பால்வெளியோ!
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே!
தூரம் சென்றேநாம் உறங்குவமோ!
சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்!
காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்!
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்!
செல்லும் இடம்வெகு தூரமாசொல்!
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது!
முற்றியதும் அன்னம் உண்பதற்கு!
கல்லுடைத் தில்லமும் கட்டினோம்காற்றும்!
குளிர்கொல் விலங்கும் தவிர்ப்பதற்கு!
ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்!
ஆயின் பிறந்திட்ட காரணமென்!
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்!
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்!
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில!
விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்!
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு!
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்!
ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்!
அன்பினை மட்டு மிழந்துவிட்டார்!
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு!
நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்!
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை!
கேட்பதற்கு இங்கு யாருமில்லை!
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்!
கத்தி எடுப்பவன் தானே இறை!
எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்!
கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை!
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட!
வாழ்வுதனில் என்று தோன்றவில்லை!
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்!
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன் !
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை!
வேண்டாம் இனியோர் பிறவி யென்றேன்!
!
02.!
முத்துத்தமிழ் கொல்வோன்!
------------------------------------------!
முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்!
வெட்டித்தலை கொத்திக் கிழியென!
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ!
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்!
கற்பைக்கெடு, குத்திக் கொலையென!
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ!
கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி!
கத்திக்குரல் சத்தமிட ஒழி!
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு!
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்!
சுற்றிப்பொது பொத்து பொதுவென!
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக!
முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்!
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்!
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக!
கத்திக்குடி மக்கள் முழுவதும்!
திக்குத்திசை விட்டுத் திரிபடும்!
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே!
வெட்டித்தலை கொட்டக் குருதியும்!
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்!
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்!
பட்டுக்கிட செத்துத் தொலையென!
சொட்டும்மனம் இரக்கப் படவிலை!
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட!
பத்தும்பல கட்டுக் கதைகளை!
விட்டுப்பலர் புத்திக் கழுவிட!
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண!
செத்தும்விழும் ரத்தப் பிணமதை!
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்!
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே!
பக்கம்இரு ரத்தக் கொலைவெறி!
யுத்தப்பிரி யெத்தன் அரசது!
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய!
மத்தம்பிடி பித்தன் கொலையிடு!
வித்தைதனை மெத்தப் பழகிய!
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ!
விட்டுத்துயில் தட்டு கதவினை!
சட்டத்துறை தக்கப் பதிலிடும்!
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்!
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை!
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை!
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே!
கட்டித்தடி வெள்ளை கொடியுடன்!
விட்டுச்சுடும் வீரக் குழலதும்!
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக!
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்!
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை!
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ!
வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட!
கத்திக்கிலி பற்றிக் கதறிய!
மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ!
வட்டிச்சக மொத்தத் தொகைபெற!
கத்திக்குரல் விட்டுக் கதறிட!
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ!
சுற்றிச்சுழல் வட்டப் புவியது!
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்!
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்!
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்!
சற்றுத்திசை பக்கம் அசைவிட!
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி!
எட்டிக்களம் தொட்டுப் பகைவரை!
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்!
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே!
கட்டிப்படை சுற்றிப் பலமெடு!
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்!
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்!
கத்துங்கடல் சுற்றும் பெருவெளி!
மற்றும்நிலம் முற்றும் முப்படை!
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண!
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை!
பட்டுப்பல மொக்குப் பதருகள்!
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு!
ஒற்றைக்கரம் கொண்டே உருவிய!
வெட்டுக்கொலை வாளைச் செருகிட!
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக!
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை!
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற!
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே!
அச்சம்இலை சற்றுப் பொறுபொறு!
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்!
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்!
திட்டமிடு துட்டர் குணமுடன்!
சட்டம்எமை முற்றும் புரிந்திட!
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

கிரிகாசன்