கதவுகளைத் !
திறந்துவிடும் போதெல்லாம் !
அம்மா வந்து விடுகிறாள்!
பிறகொரு நாட்களில்!
ஏனோ கதவைத் திறந்தே!
வைத்திருந்தேன்!
அம்மா!
ஆனந்தமாக!
சுற்றித் திரிகிறாள்!
பிரவேசிக்கிறாள்!
நிறைவேறாத கனவுகளை!
என்னுடன்!
பகிர்ந்து கொள்கிறாள்!
அவ்வப்போது!
காற்றாடியின் சுழற்சியைக்!
காட்டி அச்சம் கொள்கிறாள்!
ஒரு நாள் !
அம்மாவாசை இரவில்!
அம்மா தூரத்திலிருந்து!
கதறுவது கேட்கிறது!
“நீயும் ஒரு நாள் வந்து பார்”!
கட்டிலுக்கடியில்!
நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த!
அம்மாவின் தூக்குப் புடவையை!
அனைத்துக் கொண்டு!
உறங்கினேன்!
அம்மா!
கனவுகளின் துயரத்தில்!
தொங்கிக் கொண்டிருந்தாள்!
!
-கே.பாலமுருகன்!
மலேசியா

கே.பாலமுருகன்