இராதை கண்ணனுக்கு எழுதிய கடிதம்!
(சுருக்கப்பட்டது)!
கோகுலம்,
மழைக்காலம்.!
வாவிகள் நிரம்பிவிட்டன!
வெள்ளிகள் முளைக்காத!
இருண்ட இரவுகளில்!
காத்திருக்கிறேன் நான் உனக்காக!
எங்கோ தொலைதூர நகரங்களின்!
தொன்மையான இரகசியங்களிற்கு!
அழைப்பது போன்ற உன் விழிகள்!
வெகு தொலைவில் இருந்தன!
என்னை விட்டு!
புதைந்திருக்கிறது மௌனத்துள் மலை!
இருக்கிறேன் நான் துயராய்!
அசைகிறது சலனமின்றி நதி!
காற்றில் துகளாய்ப் போனேன்!
இங்கே,!
என் கண்ணா!
சற்றுக் கேள் இதை!
மல்லிகைச் சரம் போன்றது என் இதயம்!
கசக்கிட வேண்டாம் அதை!
ராதா!
பிரியமுடன்!
பா.அகிலன்