மீண்டும் மீண்டும்!
தலையைத் தொலைத்தவர்களைத்தான்!
சந்திக்க நேர்கிறது!!
அவர்கள்!
தலைகளைத் தேடிக்!
கிளம்பியிருக்கிறார்கள்!!
போர் கத்தியின்!
முனைகளில்!
தலையைத் தொலைத்த!
போர் வீரன் போல!
பாசாங்கு செய்து கொண்டு!
தனக்கான தொலைந்த தலைக்கு!
முகமூடி போடுகிறார்கள்!!
அவர்களின் உடலெல்லாம்!
தலைகள் முளைத்துக் கொண்டு!
வருகின்றன!!
தற்செயலாக!
என் வீட்டு அலமாரியில்!
அவர்களுடைய!
தலைகள் வரிசையாக!
அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு!
வியக்கிறேன்!!
அவர்களுடைய!
தலைகள் பேசுகின்றன!!
அழுகின்றன!!
திரும்பிச் செல்ல!
மனமில்லாமல்!
முகத்தை மறைத்துக்!
கொள்கின்றன!!
தலையற்ற!
அந்த உடல் செய்த!
பாவத்திற்காக!
தலைகளைத் தண்டிக்க மறுத்து!
நான் சேகரித்த தலைகளை!
அலமாரியில் பத்திரப்படுத்துகிறேன்!!
கே.பாலமுருகன்!
மலேசியா

கே.பாலமுருகன்