நடப்பதற்காக!
ஏங்கி ஏங்கியே!
நடப்பதை மறந்திருந்தோம்!!
நடப்பதென்பது சிரமமானது!
என்று எங்களைப்!
பயமுறுத்தி வைத்திருந்தார்கள்!!
நடப்பவர்களை !
அதிசியத்துப் பார்த்தோம்!!
மிரட்டினார்கள்! அதட்டினார்கள்!!
கால்களை உடைத்து!
ஊனமாக்கினார்கள்!!
நடப்பது!
நடக்க நினைப்பது!
நடக்க முயல்வது!
என்ற !
பாவங்களுக்கு!
தனிதனியாக தண்டனைகள்!
வகுத்திருந்தார்கள்!!
சங்கிலியால்!
இறுகக் கட்டி!
தூன்களில் !
சிறை வைத்தார்கள்!!
எக்கி எக்கி!
தவித்தோம்!
உடைந்த கால்களுடன்!!
தவழக்கூட வழியில்லாமல்!
சிலையானோம்!!
சிலர்!
எங்களைத் தெய்வம்!
என்று போற்றினார்கள்!!
தெய்வமானோம்!!
அவர்களுக்கும் தெரியவில்லை!
இவர்களுக்கும் தெரியவில்லை!
நாங்கள் நடக்க!
ஆசைபட்ட கணங்கள்!
பற்றி!!
கே.பாலமுருகன்!
மலேசியா
கே.பாலமுருகன்