பூச்சாண்டி வருவதாக!
அன்னை ஊட்டிய!
ஒரு பிடிச் சோற்றின்!
உயிர்ச்சத்தில்!
உதயமானது என் கிராம வாழ்வு!
புழுதிக்காற்றின்!
மண்வாசனையில்!
எத்தனை முறை!
நுகர்ந்திருக்கிறேன்!
தாய் மண்ணின் சுகந்தத்தை....!
மழை நாள் பொழுதுகளில்!
தெருவெல்லாம் திரண்டோடும்!
அழுக்கு நீரில் கால்நனைத்து!
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....!
நிலாச்சோறு!
திருட்டு மாங்காய்!
சைக்கிள் விபத்து!
முதல் காதல்!
இன்னும் எத்தனை நினைவுகள்!
என் உயிரோடு ஒட்டியபடி....!
அத்தனையும் துறந்து!
உலக வரைபடத்தில் மட்டுமே!
தாய்நாட்டை காணமுடியுமான!
ஒரு தேசத்தில் நான்....!
பணம் சம்பாதித்துக் கொண்டே!
இருக்கிறது!
என் உடல்!
உயிர் மட்டும்!
இன்னும் என் தெருமுனையின்!
பனைமரத்தடியில்.....!!
!
-நிந்தவூர் ஷிப்லி
நிந்தவூர் ஷிப்லி