சதா மௌனம் - நவஜோதி ஜோகரட்னம்

Photo by Pramod Tiwari on Unsplash

சுழிப்புகள் படர்ந்த முகத்தால்!
நுகர்ந்து எழும்புகின்றது உலகம்!
இதற்குள்!
ஒரு குழந்தை போன்ற மனதை!
எப்படி திறந்து வைப்பது?!
இரும்பின் வாசனை படர்ந்து!
பேதங்கள் தொனித்து!
ஒரே இனத்துக்குள் நகைப்பு!
மயக்கமுறும் பகலில்!
மனிதனை நினைத்து!
கவிதை எழுதுகையில்!
கருமையிருள் கவ்விப்பிடிக்கிறது!
வஞ்சம் வைத்து!
ஆபாசங்களும்!
வெறுக்கின்ற முகங்களும்!
பொய்யாய் தொத்திக் கால்களோடும்!
அடுக்கப்படுகிறது ஒரு தவம்!
அடிக்கடி உடைமாற்றும்!
உலகைப் பார்த்து!
பேச வலுவற்ற ஊமையாய்!
சிரிக்க விளைகையில்!
வெட்கம் வருகிறது!
விரும்பாத ஒரு இயற்கைக்குள்!
பரவசங்கள் சிதறுகின்றது!
ஒரு தரமான உலகத்தை!
தேடி அலைகிறது என் மனம்!
சிரிப்பைப் பற்றியவளாய்!
சதா மௌனத்துடன்!
என் கண்கள!
பூமியெங்கும்!
தொங்குகிறது!!
15.8.2009
நவஜோதி ஜோகரட்னம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.