'நீ எனக்குத் தாயுமில்லை!
நான் உனக்கு மகனுமில்லை'!!
'நீ எனக்கு மகனுமில்லை!
நான் உனக்கு அப்பனுமில்லை'!!
'நீ என் உடன் பிறப்புமில்லை!
நான் உன் கூடப் பிறக்கவுமில்லை'!!
'நீ யாரோ!
நான் யாரோ'!!
இப்படியாக!
கோபத்தின் வேகத்தில்!
வெறுப்பின் விளிம்பில்!
விரக்தியின் உச்சத்தில்!
எத்தனையெத்தனையோ!
வார்த்தைகளின் வெளிப்பாடு!
அறியாமை இருளில்!
உணர்ச்சிகளின் தாக்கத்தில்!
நம் அன்றாட வாழ்வில்!!
வாயின் வார்த்தைகள்!
நிஜமாகுமா?!
வாளால் வெட்டுவதால்!
நீர் துண்டாகி விடுமா?!
ஒட்டும் உறவுகளும்!
நட்பும் வேண்டுமானால்!
கூடலாம் பிரியலாம்!!
அழியலாம்!!
இறைவனால் உருவாக்கப்பட்ட!
இரத்த உறவுகளுக்குள்!
உயிர்ப் பிரிவுகள்!
உடலழிவுகள் உண்டு!!
ஆனால்!
உறவுப் பிரிவுகளோ!
அழிவுகளோ!
என்றென்றும் இல்லை!!
இறப்பே இல்லா!
உறவுகள் இவை!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்