நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன!
மனித மாமிச வாசனைகள்!
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்!
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி!
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்!
நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்!
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன!
தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்!
எதுவுமற்ற எலும்போட்டுடலில் இணைக்கச் சொல்லி!
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது!
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று!
ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை!
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக!
நின்று துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது!
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்!
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி!
வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்!
இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்!
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்!
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்!
தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று!
சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்!
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்!
இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து!
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்!
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத!
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்!
!
-எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ