எப்பொழுதுமே உணர்வுகளற்ற உருவங்களின்!
மாயத் தோற்றங்களில் மறைந்து கொண்டே!
உரையாட வேண்டியதிருக்கிறது கதை சொல்லிகளிடம்!
நயமாய் சேகரப்படுத்தப்படும் வார்த்தை நயங்களில்!
இலகுவாய் அமிழ்த்து விடுகிறார்கள் தங்கள் பாத்திரங்களை!
கரு சேருமிடங்களின் மையப் புள்ளிகளையும்!
அக் கருவைப் பேசும் உள்ளடக்கிகளையும்!
சுலபமாய் அவர்கள் கணித்து விடுவதும்!
தோற்ற மெலிவும் வாட்டப் பொலிவுமாயொருத்தனை!
அசகாயச் சூரனாய்ச் சித்தரிப்பதும்!
கதையின் நிகழாக்கத் தோற்றங்களிலிருந்து!
போற்றச் செய்கின்றன அக்கதை சொல்லிகளை!
மேற்காய் உதிக்கும் சூரியனை!
உச்சிப் பகலில் சில விண்மீண்களை!
மார்கழிப் புயலை!
ஆடிப் பனியை!
இப்படியான எல்லா அடிப்படையில்லா மூலக் கூறுகளும்!
அபரிமிகு சாத்தியங்களாகிப் போகின்றன அவர்களுக்கு மட்டும்!
சில வேளை அவர்களுடன் கதை கேட்டுக் கிடக்கையில்!
திடீரென்று கக்கங்களில் முளைத்த சிறகுகளில்!
பறந்து விடும் அவர்களைத் தேட வேண்டியதிருக்கிறது!
அவர்களில் ஆயப்படும் நிஜங்களைப் போன்றே
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ