காயங்கள் காய்ந்தாலும்!
வடுக்களென்றும்!
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...!
வெற்றிக்களிப்பில்!
வீரமெனப்படுவது!
மூழ்கிக்கிடப்பினும்!
முறித்துப்போட்ட எம்!
முழு நிலவுகளை எந்த வானம்!
முழுமையாக தந்திடும்...!
இருகிய இதயத்தினை!
இறைவழியின் துணைகொண்டு!
சுமைகளின் வழிதனை!
சுத்தமாய் மறக்கத்தான்!
நித்தமும் மகிழத்தான்!
நிகழ்காலந்தனை தேடுகிறோம்...!
உறவுகளை இழந்து!
உரிமைகளை துறந்து!
ஊனப்பட்டபோதும்!
உள்ளத்தால் எழுந்திடவே -நம்பிக்கையில்!
ஊன்றி நிற்கின்றோம்...!
விழுந்தவை விதைகளல்ல எங்கள்!
விடியல்கள்!
வானம் தொலைத்த நிலவாய்!
வாழ்வுதனை தொலைத்த எமக்கு!
முகாம்களே முகாந்தரமானது!
அகதி இலச்சினையே!
அந்தஸ்தானது...!
போதும் போதுமிறைவா!
போகும் வழிதனை தந்திடு!
புதிய பாதை கண்டிட!
புத்துணர்ச்சி தந்திடு!
புயல்களை நாமும் எதிர்த்திட...!
விடைகளுக்குள்ளே!
வினாவெழுப்பும் விளங்காதவர்களாய்!
விழித்ததெல்லாம் போதும்!
ஒளிபறித்த தழைகளை!
ஒதுக்கிவிட்டு!
ஒற்றுமை குரலோடு!
ஓங்கியொலிக்கப் போகிறோம் -சுமைகளையும்!
ஒழிக்கப்போகிறோம்

த.எலிசபெத், இலங்கை