ஏறக்குறைய ஏற்றமானவர்களின் பாடும்!
இலவு காத்தி கிளிதான்!
நாளை அடுத்து வரும்!
அன்றைய அந்திப் பொழுதுகள்!
கண்டிப்பாய் வேரறுத்துச் செல்லும்!
கழிந்த மந்தப் பொழுதுகளை!
உராசி சிராய்த்து கீறிச் சென்ற!
கால காலன்களின் ரணங்களை!
வடுவோடு அறுத்தெறியும் சஞ்சீவ இலைகள்!
அந்தப் பொழுதுகள் வசம்!
இருள்கள் அள்ளி வீதியில் எறியும்!
சோகங்கள் கிள்ளி!
அகலப் பாதாளங்களில் கிடத்தும்!
இரும்பாய் இத்துப் போன இதயங்களில்!
வானவில் கொண்டு வர்ணம் பூசிடும்!
என் பெயர் உருவம் மாறா!
எனக்குள்ளான என்னிலக்கணம் மாறா!
என்னுள் புதியவனொன்றை!
ஏற்றம் மிக்கவனாய் ஜனிக்கச் செய்திடும்!
எனக்கான இன்னொரு ஆதாம்ஏவாள் அது!
கனவுகள் விரிய காத்துக் கிடப்பவர்களின்!
ஒவ்வொரு பிணிக்கான மருந்து ஒன்று!
அவரவர்கள் சட்டைப்பைகளில்!
காலாவதியாகிக் கொண்டிருப்பதை!
ஏற்றபாடில்லை எவரும்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ