புலர்ந்த பின் பொழுதுகளுக்குப்பாலான சன்னல் கீற்றுகள் வழியே!
ஒளிக் கற்றைகளை வலுத்துத் திணித்த படியாய் சூரியன்!
சில உருவங்களை ஆய்ந்து கொண்டிருந்தது!
விரைந்த நேற்றையைவைகளைச் சாடியுமாயும்!
அன்றைய அடுத்த பொழுதுகளைப் பாடியுமாயும்!
சில உருவங்கள் சல்லாபமிட்டுக் கிடந்தன!
வெளுந்து மெலிந்த கோரைப் புல்லாய் சில உருவங்கள்!
தரைக்குச் சமானமாய் விரிந்து படர்ந்திருந்தன!
சுவற்றோரமாய் சம்மனமிட்டபடியான ஒரு உருவத்தின் பாலமர்ந்து!
அதன் ஆடையை உரியத் தொடங்கியிருந்தன சில உருவங்கள!
கீதையை உபாயாசித்த படியாயும்!
ஜெப மாலையை உருட்டிய படியாயும் சில உருவங்கள்!
கனத்த சில்லரை மூடைகளை அவிழ்க்கத தொடங்கியிருந்தன!
இரு மருங்கிலும் விரிந்த சிறகுகள் நிமிர்த்தி!
வெளியுலாவத் தயாராயிருந்த சில உருவங்கள!
முற்ற நடுவாய் மிடுக்காயமர்ந்து!
பெரிய தலை உருவமொன்று உத்தரவுகள் சொடுக்க!
பணியக் கிடப்பதாய் தலையாட்டிக் கிடந்தன!
சில சிறிய தலை உருவங்கள்!
நன்றாய் வயிருப்பிய சில கர்ப்பிணி உருவங்கள்!
இன்னும் சில உருவங்களை பொறிக்க காலம் காத்துக் கிடந்தன!
இன்னும் பழுத்துச் சூடேறிய சூரியக் கீற்றுகள் பட்டு!
தங்கள் நிழல்களைக் களைந்த படியாய்!
நிஜங்களாகத் தொடங்கின மாமிச உருவங்கள்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ