01.!
நழுவுதல்!
---------------!
நடைபற்றி வந்த நிலா!
கால் இடறிக் குளத்தில் விழுந்து!
தத்தளித்துக் கொண்டிருந்தது!
அதைக் கைகளில் அள்ளியள்ளி!
கரையில் ஊற்ற!
மீனைப் போல!
நழுவி நழுவி மீண்டும் மீண்டும்!
குளத்தில் சேர்கிறது!
02.!
உருண்டைச்சோறு!
------------------------!
அப்பா மிரட்டுவதோடு சரி!
அம்மா வற்புறுத்தி ஊட்டுவாள்!
அக்கா பிடுங்கித் தின்பதாய் பாசாங்கு செய்வாள்!
தாத்தா இருக்கும் வரை யானைச் சவாரிக்கு பஞ்சமில்லை!
பாட்டி தான் ஒரு வாய்க்கு ஒரு கதை சொல்லி!
தானாகவே என் வாய் பிளக்க வைப்பாள்
முத்துசாமி பழனியப்பன்