துயர் விழுங்கிப் பறத்தல்! - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Pawel Czerwinski on Unsplash

பறந்திடப் பல!
திசைகளிருந்தனவெனினும்!
அப் பேரண்டத்திடம்!
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ!
சௌபாக்கியங்கள் நிறைந்த!
வழியொன்றைக் காட்டிடவெனவோ!
கரங்களெதுவுமிருக்கவில்லை !
ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி!
ஒவ்வொரு பொழுதும்!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்!
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல!
தன் சிறகுகளால்!
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்!
முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்!
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து!
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்!
மிதந்தலையும் தன் கீழுடலால்!
மிதித்திற்று உலகையோர் நாள்!
பறவையின் மென்னுடலின் கீழ்!
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்!
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து!
தெறித்த குருதியைப் பருகிப் பருகி!
வனாந்தரங்களும் தாவரங்களும்!
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட!
வலி தாள இயலா நிலம் அழுதழுது!
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து!
ஓடைகள் நதிகள்!
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட!
விருட்சக் கிளைகள்!
நிலம் நீர்நிலைகளெனத் தான்!
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்!
தடயங்களெதனையும் தன்!
மெலிந்த விரல்களிலோ!
விரிந்த சிறகுகளிலோ!
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு!
வெளிறிய ஆகாயம் அதிர அதிர!
தொலைதுருவமேகிற்று!
தனித்த பறவை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.