பால்யம் நகரும் பொழுதை மிதி - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by FLY:D on Unsplash

ஆலயங்களின் பெரும்பரப்பில் !
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்!
நாட்கள் நினைவில் இடற!
ஒரு மலை போன்ற வேதனை,!
ஒரு வனாந்தரப்பசுமை!
அத்தனையும்!
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்!
கனவாய்க் காற்றாய்!
வாழ்க்கை தொலைத்தேன்;!
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !!
பால்யத்துப் பள்ளிக்கூடங்களில் !
ஒன்றாய்த் திரிந்தோம்;!
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்!
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்!
காட்டு இலைகளையும்,மணலையும்!
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !!
என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு!
உன் எச்சில் தடவினாய்,!
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ!
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன் !
காதலில்லை,காமமில்லை!
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்!
அதிலிருக்கவில்லை !!
புது வயதுகள் பிறக்க,!
பால்யம் பாதி கரைய,!
வசந்தங்கள் உன் வாழ்வில் வர!
நான் தனித்து வரண்டுபோனேன் ;!
என் இரகசியச் சினங்களைத்!
தூறலாய்ப்பொறுத்து!
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,!
நான் யாதாகித் திரிகிறேன்...?!
நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,!
செவியேற்க யாருமற்ற!
பாழ்வீதியொன்றில்- நானின்று!
நின்றுகொண்டேயிருக்கிறேன்!
என் துயரங்களைப் பாடியபடி;!
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி!
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது!
பாதங்களை மீளப்பெறும் நாளில்!
நாடேகுவேன் !!
அன்று !
வீதியில் உன் மழலைகள்!
செம்மண் தூசு உடல் அப்ப!
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக் !
காண நேரிடலாமெனக்கு..!!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.