அதீத மனங்களில் மிதந்து வழியும்!
ஆசைகளை அவளறிவாள்!
தன் வஞ்சக விழிகளில் சிரித்து!
மென்மை வழியும் குரலினை!
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி!
தூண்டிலென எறிவாள்!
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட!
பிஞ்சுமனங்களை அவளிடம்!
கொடுத்துப் பார்த்திருங்கள்!
அல்லது!
உலகம் மிகவும் நல்லதெனச்!
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை!
அவளிடம் விடுங்கள்!
அம் மனிதன் தானாகவே!
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை!
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான!
நஞ்சை மிடறாக்கி!
அருந்த வைத்திருப்பாள் அவள்!
கைவசமிருக்கும்!
எல்லா நெஞ்சங்களையும்!
கெட்டதாக்கி அழுகவைத்துப்!
பின்னொருநாள் புது இதயங்களுக்கு!
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்!
அழுதழுது நீங்கள்!
அவளைத் தேடிச் சென்றால்!
உங்களைத் திரும்பச் சொல்லி!
மென்மையானதென நீங்கள் சொல்லும்!
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்!
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்!
எச்சிலோடு காறி உங்கள்!
வாடிய முகங்களில் துப்பிடுவாள்!
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை!
வக்கிரங்களறியவென!
அவளிடம் கொடுத்த நீங்கள்!
இதையெல்லாம்!
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
ஏனெனில் அவள்!
சாகசக்கார வெளியில்!
வன்முறைகளை விதைப்பவள்!
சாகசக்காரியின் வெளி!
அதீத மனங்களில் மிதந்து வழியும்!
ஆசைகளை அவளறிவாள்!
தன் வஞ்சக விழிகளில் சிரித்து!
மென்மை வழியும் குரலினை!
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி!
தூண்டிலென எறிவாள்!
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட!
பிஞ்சுமனங்களை அவளிடம்!
கொடுத்துப் பார்த்திருங்கள்!
அல்லது!
உலகம் மிகவும் நல்லதெனச்!
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை!
அவளிடம் விடுங்கள்!
அம் மனிதன் தானாகவே!
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை!
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான!
நஞ்சை மிடறாக்கி!
அருந்த வைத்திருப்பாள் அவள்!
கைவசமிருக்கும்!
எல்லா நெஞ்சங்களையும்!
கெட்டதாக்கி அழுகவைத்துப்!
பின்னொருநாள் புது இதயங்களுக்கு!
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்!
அழுதழுது நீங்கள்!
அவளைத் தேடிச் சென்றால்!
உங்களைத் திரும்பச் சொல்லி!
மென்மையானதென நீங்கள் சொல்லும்!
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்!
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்!
எச்சிலோடு காறி உங்கள்!
வாடிய முகங்களில் துப்பிடுவாள்!
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை!
வக்கிரங்களறியவென!
அவளிடம் கொடுத்த நீங்கள்!
இதையெல்லாம்!
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
ஏனெனில் அவள்!
சாகசக்கார வெளியில்!
வன்முறைகளை விதைப்பவள்!
எம்.ரிஷான் ஷெரீப்