வருடமெல்லாம் வசந்தம் மலரும்!
வறுமை தொல்லை யாவும் தீரும்!
மழலைகள் சிரிப்பு போலே
கவலை மறந்த வாழ்வு காலமெல்லாம்
நம்மைத் தொடரும்!
சிறகு விரிந்த பறவையாகி
சிந்தனை கடந்த உலகில் பறப்போம்!
பரந்த பூவுலகில் பரம் பொருளை
சிரம் தாழ்த்தித்தொழுது மகிழ்வோம்!
ஒளிவுண்டு,மழையுண்டு!
உயிர்களெல்லாம் நட்புண்டு!
ஒவ்வொன்றும் நமக்கென்று
படைப்பாக அமைந்ததுண்டு!
உயர்வு தாழ்வென்ற ஒப்புமை
கண்டு கண்டு இருக்கும் நலத்தைக்
கெடுத்தல் எதற்கு! பிறந்தோமே
நல் நிலையில் --, நிகழ்விலும்
எதிர்விலும் நன்மையே கொண்டு
நிஜத்தை மட்டும் சுவைப்போம்
இது முதற் கொண்டு
எழிலி