பசுமை என்னும் தாய்மை.. பகைத்திடுவாய் இன்றே புகைத்தலை நண்பா..!!
01.!
பசுமை என்னும் தாய்மை!
------------------------------------------------!
பாட்டினால் விளக்குவேன் “பசுமை”ப் புரட்சி!
கேட்டிடு தோழா! கேடுகள் வாரா!
காட்டினை அழித்து கட்டிடம் கட்டினால்!
வீட்டினுள் காற்று வீசிடுமா என்ன?!!
”ஏசி”க் காற்று எல்லார்க்கும் கிட்டிடுமா?!
யோசித்துப் பார்த்து உன்னறிவில் பட்டிடுமா?!
“ஓசான்” படலமும் ஓட்டை ஆனதால்!
சுவாசிக்கக் காற்று சும்மா கிட்டிடுமா?!
தென்றல் உன்னைத் தீண்டிட வேண்டும்;!
மன்றலில் மலர்கள் மணத்திட வேண்டும்;!
குன்றாது மழையும் கொட்டிட வேண்டும்;!
நன்றாய் மரங்களை நட்டிட வேண்டும்!
வீட்டில் தோட்டம்; வீதியில் மரங்கள்;!
நாட்டில் “பசுமை”; நம்வாழ்வும் செழுமை!!!!
உயிர்போல் மதித்து; உரமிட்டு வளர்த்து;!
பயிர்களைப் போற்று; “பசுமை”க் காத்திடு!
தாய்போல் உன்னைத் தாங்கிடும் மண்ணின்!
சேய்போன்ற மரங்களை சேதாரம் செய்தால்!
நோய்தீர்க்கும் மூலிகை நொடியில் கிட்டுமா?!
ஓய்வின்றி மரங்களை ஒடித்துப் போடாதே!
பிறப்பின் துவக்கம் படுத்திட்ட மரக்கட்டை!
இறப்பில் உனக்கு இடும்பெயர் “கட்டை”!
இடுகாடு சுடுகாடு இரண்டிலும் மரக்கட்டை!
கொடும்வெயில் சொல்லும் குளிர்நிழல் மரத்தினையே..!!!!!!
02.!
பகைத்திடுவாய் இன்றே புகைத்தலை நண்பா..!!
----------------------------------------------------------------------------------!
வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;!
விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);!
மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;!
நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;!
புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி!
உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;!
குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;!
சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;!
மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!!!
உன்னை வளர்த்த உயர்வான சமூகத்திற்கு!
உன்னால் தரப்படும் ஒழுக்கமற்ற துரோகத்திற்கு!
என்ன தண்டனை என்ற போதே!
உன்னை நீயே உருக்குலைப்பது போதுமே...!!!!!
இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;!
முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது!
இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே!
விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை!
தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர்தல்;!
பாலில் நஞ்சுபோல் பார்வைக்கு தெரியாமல்!
ஒவ்வொரு இழுப்பும் உயிரின் இழப்பு!
ஒவ்வொரு நெருப்பும் உடலினைக் கருக்கும்
கவியன்பன் கலாம்