வலிக்குது!
01.!
அதிசயக்குழந்தை - உணவு !
-----------------------------------!
சாப்பிடாயா என்று கேட்டேன் ....!
சாப்பிடேன் என்றான் .....!
அதிசய குழ்ந்தை .......!!!!
என்ன சாப்பிட்டாய் ....?!
என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் ....!
எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ...!
என்று சொன்னான் .....!!!!
எப்படி சாப்பிட்டாய் ....?!
அடித்து பறித்து சாப்பிட்டேன் ....!
நீ அத்தனை கொடூரமானவனா ...?!
நான் மட்டுமல்ல நீங்களும் ....!
அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!!!
தன் இனத்தை பெருக்க வந்தத ....!
தன் உணர்வை வெளிப்படுத்த வந்த ....!
அத்தனை உயிரினத்தையும் ....!
நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை ....!
பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!!!
மாங்காய் தேங்காய் என்று ....!
அவை முதுமை அடைய முன்னரே ....!
அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் .....!
குடியோடு குடித்தனமாய் தூங்கும் ...!
ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே ....!
கண்ணி வைத்து கொலை செய்து ....!
சாப்பிடுகிறோம் ......!
கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ....!
பறவைகள் - சாரை சாரையாய் ...!
அலைந்து திரியும் மீன்கள் ....!
அத்தனைக்கும் வலைபோட்டு ....!
வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ....!!!!
எல்லாமே இறைவன் எமக்கே ....!
படைத்தவன் என்று இறைவனை ....!
பிணையாக வைத்து அத்தனையின் ....!
வாழ்வுரிமையைசாப்பிடுகிறோம் ....!!!!
கேட்டால் அதுதான் உணவுசங்கிலி ....!
என்று ஒரு கோட்பாட்டையும் !
வைத்திருக்கிறோம் - சொல்லுங்கள் ....!!!!
ஆசானே ....!!!!!
சமைத்து சாப்பிட்டோமா ....?!
சண்டையிட்டு - மனசமரசத்துடன் !
சாப்பிட்டோமா ....?!
02.!
அதிசயக்குழந்தை - பூதம் !
---------------------------------!
ஒட்டு துணிகூட இல்லாமல் ...!
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....!
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....!
விளையாடிகொண்டிருந்தான் ....!
அதிசயக்குழந்தை .......!
டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...!
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!!
மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....!
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...!
என்றேன் ....!
நீங்க மட்டும் அழுகில்லையோ...?!
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....!
ஆசானுக்கு நான் சொல்வதா ...?!
ஊழ்வினை உடம்பே அழுக்குதான் ....!
பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!!!
மனத்தின் அழுக்கை நீக்க !
கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் ....!
உடலின் அழுக்கை நீக்கவும் ...!
தண்ணீரால் கழுவுகிறீர்கள் ....!
கோபப்படும் போது நெருப்பாய் கொதிக்குறீங்க ..!
உள்ளத்தை துளைக்கும் சொல்லை ...!
காற்றோடு கலக்கிறீங்க ....!
உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ...!
அசுத்தமாக்கும் போது !
நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் !
உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....?!
என்றான் - அதியக்குழந்தை.....!!!!
போதும் போதும் உன் வியாக்கியானம் ..!
என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ...!
அதட்டினேன் .....!
விழுந்து விழுத்து சிரித்தான் ....!
ஏனடா சிரிகிறாய்....?!
இயலாமையின் இறுதி கருவியே ....!
அதிகாரம் என்றான் ...!!
திகைத்து நின்றேன் ....!!!!
தன் பகுத்தறிவால் விடைதராமல் ....!
பட்ட தடியை தூக்கி நியாயம் தேடும் ...!
ஆசானே - உம்மில் குற்றமில்லை ....!
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது !
என்பதுபோல் உங்கள் புத்தக படிப்பு !
எனக்கு சரிவராது என்றான் !
!
03.!
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!!
---------------------------------------!
பச்சை நிற உடலழகியின்...!
வண்ண வண்ண பூக்கள் ....!
அங்காங்கே அழகுபடுத்தும் ....!
பச்சை நிற அழகியின் வதனம் ....!
சுற்றும் முற்றும் பார்த்தேன் ...!
தூரத்தில் யாரும் இல்லை ...!
தடுப்பாரும் யாருமில்லை ....!!!!
கிள்ளி எடுத்தேன் பூவை ....!
தள்ளி போகமுடியாமல் ..!
தன் வதனத்தை இழந்து ...!
தவிர்த்த செடியின் சோகத்தை ...!
இப்போ நினைத்தால் .....!
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!!
ஆற்றங்கரைக்கு போனேன் .....!
அழகான ஆற்று நீரில் கால் ....!
பதித்தேன் தட்டி சென்றது மீன் ...!
கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ....!
ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!!!
என்னை மறந்தேன் -தூண்டிலில் ...!
புழுவை செருகி துடிக்க துடிக்க ....!
மீன் ஒன்றை பிடித்தேன் ....!
இரண்டு உயிரை கொன்று ...!
அன்று இன்பமடைந்தேன் .....!
இப்போ நினைத்தால் .....!
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!!
புல்வெளிக்கு விளையாட சென்றேன்.....!
வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ...!
மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே .....!
ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு ....!
படபடத்தது கலைத்து களைத்து ....!
போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன்..!!!!
அதன் மென்மை இறகு ...!
சற்று கிழிந்தது பறக்க முடியாமல் ...!
துடித்தது - பட்டாம் பூச்சியை பிடித்து ...!
இன்பம் கண்ட அன்றைய இன்பத்தை ....!
இப்போ நினைத்தால் .....!
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!!
தோட்டத்துக்கு புல்பிடுங்க சென்றேன் ....!
துள்ளி துள்ளி குதித்து கன்றுகுட்டியை ....!
தோட்டப்பயிரை நாசமாக்குது ....!
பிடித்து கட்டு மகனே என்ற கட்டளைக்கு ....!
உடனே அதை பிடித்து கட்டினேன் ....!!!!
கட்டியவுடன் தூரத்தில் நின்ற தன்....!
தாயை அம்மா என்றழைத்ததை ....!
என்னை விளையாட விடுகிறார்கள் ....!
இல்லையென்பதுபோல் கத்திய சத்தம் ...!
இப்போ நினைத்தால் .....!
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!!
அடம்பிடித்து கிளிக்கூடு வாங்கி ....!
இரவுநேரம் தென்னம் பொந்துக்குள் ....!
திருட்டுத்தனமாய் தாயிடம் இருந்து ...!
குஞ்சை பறித்து கூட்டில் அடைத்து ....!
பழமூட்டி எண்ணைதடவி கண்ட ...!
இன்பத்தை இப்போ நினைத்தால் .....!
மனசு கொஞ்சம் வலிக்குது
இனியவன்