சுடு காட்டுத் தணல் வீசும்!
இந்த அக்கினிக் கிடங்கை!
இன்னும் நாம் காவிக் கொண்டு ....!!
வெற்றுடம் பெங்கும்!
பயவுணர்கள் உரசுவது!
இந்த நூற்றாண்டில் தான்!
கையினில்!
உயிரைப் போத்தியும்!
ஏதோவொரு அந்தரிப்பில்!
ஊசலாடுகிறதே உயிர்!!
சதைசப்பி உமிழ்ந்து!
குதறுவதான கனாக்களோடு!
புரளுகிறது இரவுகள்!
மீந்திருப்பவைகள்!
விழி நீர்க் கசிவுகளும்!
மாயைகளுமாய்.....!
ஒரு மித்துக் கூவுவோம் இனி!
சமாதானமென!
இல்லையேல்!
சமாதானக் காற்றினை!
உள் வாங்கிட!
அண்டவெளி சென்றாலும்!
முண்டங்களைத் தானே!
கொண்டு வரும்!
வெண்புறாக்கள்!!!
கலைமகள் ஹிதாயா றிஸ்வி