இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட அழ(ழுக்)கையெல்லாம்
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.
உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று.
தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!
பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ;
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும்
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய்.
நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்.
குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி
சீமான்கனி