அந்த சாகரங்கள்.. வேகத்தில் - செண்பக ஜெகதீசன்

Photo by Tengyart on Unsplash

விதிவிலக்குகளா!
01. !
அந்த சாகரங்கள்..!
----------------------------!
வரதட்சணை ஆறு!
வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதால்!
ஜன்னல் சமுத்திரங்கள்!
சற்றும் வற்றிவிடுவதில்லை..!
அவை,!
சாகா வரம்பெற்ற!
சாகரங்கள்…!!
!
02. !
வேகத்தில்…!
-------------------!
விரும்பி கொண்ட உறவில்!
விளைந்து!
விரும்பாமல் பெற்ற பிள்ளையை!
வீசி எறிகிறாயே வீதியில்,!
இரும்பு இதயமா உனக்கு!
கரும்பு மொழியாளே!
கன்னித்தாயே!
இன்னொரு கல்யாணமா,!
இன்பமாய் வாழ்வாயா!
இதை மறந்து…!!
எதிலும் வேகம்தான்!
எல்லாமே சோகம்தான்…!!
!
03.!
விதிவிலக்குகளா..!
--------------------------!
குளியல் அறையில்!
வெள்ளைக் கண்ணாடி!
வைத்துக்கொள்கிறது!
விதம்விதமாய்ப் பொட்டு..!
விதிவிலக்கா!
விதவை நாங்கள்!
வைத்துக்கொண்டால் பொட்டு…!!
!
-செண்பக ஜெகதீசன்
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.