01.!
சில்லரையாய்...!
-------------------!
ஆழக்கடல்!
அமைதியாய் இருக்கையில்!
இந்த!
ஓரக்கடல் ஏன்!
ஓலமிடுகிறது...!!
மணக்கும் மலர்கள்!
இணக்கமாய்!
மௌனம் சாதிக்கும்போது!
இந்த!
சருகுகள் ஏன்!
சலசலக்கின்றன...!!
பிணமும் கேட்கும்!
பணத்தில் கூட,!
கட்டுக் கட்டாய்!
கரன்ஸி நோட்டுக்கள்!
கப்சிப்பாய் இருக்கையில்,!
இந்தச்!
சில்லரைகள் எப்போதும்!
சிணுங்கத்தானே செய்கின்றன...!!
02.!
வருவாயோ...!
-----------------!
உண்டியலில்!
ஒருரூபாய் போட்டு!
வண்டி வண்டியாய்!
வரம் கேட்கும்!
பண்டமாற்று பக்தனே,!
வண்டி வண்டியாய்!
வந்துவிட்டால்!
வருவாயோ நீ!
வறுமையான சாமி பக்கம்

செண்பக ஜெகதீசன்