என்ன செய்ய.. குழந்தைக் கேள்விகள்.. முகமூடிக் கவிதைகள்.. புறக்கணிப்பு !
!
01!
என்ன செய்ய..?!
--------------------!
இன்ன பிற விஷயங்களென்றால்!
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க!
பெண் காதல் காமம் என்றால்!
பெருக்கெடுத்து ஓடி வரும்!
இந்த கவிதை வரிகளை!
என்ன செய்ய?!
02!
குழந்தைக் கேள்விகள்..!!
----------------------------!
ஏன்!
வீடு திரும்ப வேண்டும்?!
ஏன்!
சக்கரங்கள் சுழல்கின்றன?!
ஏன்!
அம்மா வேலைக்கு போவதில்லை?!
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்!
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?!
வளர்ந்த பின் தான்!
வேலைக்கு போகணுமா?!
சாலையோர பூனைகளுக்கு!
யார் சாதம் தருவா?!
குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை!
எப்போதும்!
குழந்தைகளின் கேள்விகள். !
03!
முகமூடிக் கவிதைகள்!
--------------------------- !
சூழல்கள் வேண்டும் முகங்களை!
சுலபமாய் தரிக்கும்!
இவனைப்போல்தானே இருக்கும்!
இவன் கவிதைகளும்.!
04!
புறக்கணிப்பு!
----------------- !
இவன் பற்றிய புறக்கணிப்பு!
இருக்கட்டும் ஒருபுறம்.!
இவர்களின் குழுச்சண்டையின்!
இடையில் சிக்கித் தவிப்பது!
இரண்டாயிரமாண்டு!
தமிழ்க்கவிதை அல்லவா?!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி