நீயும், நானும்!
கரகமாடிய அந்த!
ஒற்றை விளக்கு அரசமரத்தடி...!
தோல் கிழிந்து இரவெல்லாம்!
சிராய்ப்பு வலி கொடுத்த!
நாய்க்கர் வீட்டு வேப்பமரம்...!
மட்டைகளை தோளில் சுமந்து!
மைல்கணக்கில் நடந்து!
கிரிக்கெட் ஆடிய!
சொசொரப்பு மைதானங்கள்...!
எதிரியின் பம்பரங்களை!
சில்லு சில்லாக உடைத்த!
பிரேமா வீட்டு முன்வாசல்...!
பசியெடுக்காத நிலாவுக்கு!
கும்மி தட்டி சோறு£ட்டிய!
தாவணி சிட்டுக்களை!
காண அமர்ந்த திண்ணைகள்...!
குமாரிடம் மூக்குடைபட்டு!
இரத்தம் சிந்திய!
நெருஞ்சி முட்புதர்...!
இப்படி!
ஒவ்வொன்றாய்!
பதினைந்து ஆண்டுகளில்!
எல்லவற்றையும்!
மிதித்தழித்துவிட்ட!
கால அரக்கன்..!
மிஞ்சியிருக்கும் நினைவுகள்!
மட்டும்!
சுவடுகளாய்...!
இயற்கையின் உயிரையெடுத்து!
உயர்ந்தோங்கி நிற்கும்!
செத்துபோன!
கான்கிராட் கட்டடங்கள்...ஊரெங்கும்...!
தென்றல் போய்!
தேங்கிவிட்ட கொசுக்களை!
விரட்டும் பேன் காற்றுகள்!
நாகராகப் போர்வயில்!
என் கிராமமும் மாறிவருகிறது!
இன்றொரு நகரமாக...!
எங்கும்!
ஓய்வில்லா மனிதர்களின்!
தேடல்கள்...தேடல்கள்...தேடல்கள்!
என் தலை வெள்ளிக் கம்பிகளையும்!
உன் தலை வழுக்கையயும்!
தாண்டி நின்ற!
நம் புன்சிரிப்பும், தழுவல்களும்...!
ஆயிரம் மைல்களுக்கப்பால்!
நம் உடம்புகள்...!
அடுத்தடுத்த வீட்டிலிருக்கும்!
நம் இதயங்கள்...!
நண்பா!!
நிகழ்வுகளையெல்லாம்!
ஜீரணித்து!
பசியோடு சுற்றித் திரியும்!
காலத்தையும் தாண்டி நிற்கும்!
நம் நட்பு!
அற்புதத்தில் அற்புதம்.!
எழுதியவர்: யாழினி அத்தன்

யாழினி அத்தன்