ஆஹா! இதென்ன இத்தனை!
அழகு ஊர்வலம்?!
என்னே அழகு வீரர்களின்!
ஒழுங்கு நிறைந்த அணிவகுப்பு!!
சாரை சாரையாய் இவர்கள் !
எங்கே செல்கிறார்கள்?!
எந்த இடையூறு ஏற்படினும் !
கட்டுப்பாடு கொண்டு!
ஒழுக்கம் மாறாது !
கடைப்பிடிக்கிறார்களே?!
முன்னெச்சரிக்கையுடன்!
பிற்காலத்தை மனதில் கொண்டு!
பாடுபடும் செயல் வீரர்கள் !
உழைப்பின் மகத்துவத்தை !
உலகிற்கு உணர்த்துகிறார்களே......!
சிந்திக்க முடியா உழைப்புச் சிகரங்கள்.... !
நம்மை சிந்திக்கச் செய்யும் !
எறும்புகள்
பி.தமிழ் முகில்