எனக்குப் பிடித்ததில்லை!
வெட்டொன்று துண்டிரண்டு!
பேச்சிலும் செயலிலும் இருந்தது!
இன்று கெஞ்சலும் அவ்வப்போது கொஞ்சலும்!
என் வாழ்க்கை ஆகிவிட்டது!
அவளின் வருகைக்காக ஏங்கும் கணங்கள் எத்தனை?!
குரலுக்காக ஏங்கி ஓடும் தொலைபேசி!
அழைப்புக்கள் எத்தனை?!
காதலின் பிரசவத்தில் விஷமும் அமிர்தம்!
அவளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு!
வார்த்தையும் என் நினைவுகளோடு சங்கமம்!
சின்னச்சின்ன சண்டைகள்!
துளித்துளியாய் கண்ணீர்!
மனம் இழகி!
கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதித்து!
காதல் மந்திரம் சொல்வேன்!
எல்லாம் மறந்து எங்களையும் மறந்து!
புதிய காதலர்களாய்!
புதிய பயணத்தில் நானும் என் உயிரும்

எதிக்கா