கன்னிப் பருவம் கலைந்த கோலமாகி!
கனவு கண்டு கனவு கண்டு!
கருவளையமிட்ட கண்களும்!
சோர்ந்து அழகு குலைந்து... !
முப்பதைத் தாண்டிவிட்ட முதிர்கன்னியாய்...!
வரனுக்காக வாசலில் பழிகிடக்கும் பேதை நான்.!
அச்சம் நாணம் மடமை பேதமை !
அவைகளும் அற்றுப்போகுமுன்னேயாவது !
எவனாவது வருவானா !
என்னை விலை பேச?!
> கிரிஜா மணாளன் !
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
கிரிஜா மணாளன்