பூவும் வாழ்வும்.. காலையில்.. நட்பு - கிரிகாசன்

Photo by Philippa Rose-Tite on Unsplash

பூவும் வாழ்வும்.. காலையில் காணும் கவிதைகள்.. நட்பு! -பிரிந்தபின் கூடல்!
01.!
பூவும் வாழ்வும் !
---------------------!
தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது!
தேடியே பூவைக் கண்டு!
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்!
வைத்தாயே அன்புமலரே!
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்!
இதழ்மீது சுமந்து நின்றாய்!
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு!
தரைவீழும் வாழ்வுகொண்டாய்!
நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்!
நலங்கொண்டு வாழும்போது!
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற!
திகழ்கின்ற மேனியழகால்!
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி!
தவித்துநீ வீழ்தலேனோ!
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்!
விடு உந்தன் முறைமை என்றாள்!
”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது!
ஒருகோடி இன்பமாகும்!
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது!
வியப்பென்று நகைத்துநின்றாள்!
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது!
பெரிதான போதையாகும்!
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி!
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்!
இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது!
எவருக்கு வாழ்வுவேண்டும்!
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்!
காணின்ப மலர்களாகும்!
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ!
இவர் வேண்டல் பூவையாகும்!
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்!
எவருக்கு இன்னும்வேண்டும்”!
”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்!
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்!
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்!
பெயர்தந்து எமையேற்றினாய்!
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்!
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்!
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்!
நீவாழ என்ன செய்வாய்!
ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்!
றணிகொண்டு வாழுகின்றோம்!
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு!
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்!
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை!
விரிகின்ற மலர் கொள்ளுமோ?!
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்!
தேவைநம் கடமையன்றோ?”!
02.!
காலையில் காணும் கவிதைகள்!
-----------------------------------------!
தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்!
தென்றல் தொடுஞ் சுனையும்!
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்!
கனவுகளெழுந் துயிலும்!
நெளிந்தது ஆறும் நிமிர்ந்தன மரங்கள்!
நின்றிடும் நிரையழகும்!
அழிந்தது பனிநீர் அதுவென்ன பசும்புல்!
அணைசுகங் கசந்ததுவோ!
வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்!
விரிந்திடும் இதழ்எழிலும்!
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்!
புரண்டிடும் மலையிடையும்!
செழித்தன பெண்கள் சிகையிடை மலர்கள்!
செவ்விழி மலர்தாவிப்!
பழித்தன இரவின் பலமழி தோள்கள்!
பாங்குடை ஆடவரை!
செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயம்!
சிவந்திடுங் காலைதனில்!
குளித்தன இறைவன் கோவில் மணித்திரு!
கொள்மறை சுகராகம்!
வழித்தெரு நீளம் வண்ணமென் சிறுவரின்!
வளமெடு குறுநடையும்!
விழித்திட, அறிவென் விதையிட நடைகொள்!
வீறெடு சந்தங்களே!
பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி!
பாய்ந்திடு மணிலதுவும்!
கழுத்திடு மணிகள் கலகல ஒலியிடும்!
கடுநடை ஏறுகளும்!
இழுத்திடும் வண்டி இரைந்தன மூச்செழ!
ஏய்எனும் குரலொலியும்!
எழுந்திடுங் காலை இசையொலி தாளம்!
இவைதரும் சுகம்பெரிதே!
எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்!
இயற்கையின் ஒலிநாதம்!
களிகொளும் மனதில் கவிதைகள் தோன்றும்!
கருவென உருவாகும்!
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்!
வருடிடும் சுகம்காணும்!
ஒழிந்தது துயரம் உயர்ந்திட மனமென,!
உளமங்கு புதிதாகும்!
***!
கவிதையில் காணும் காலை!!
குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை!
கூனிடும் முதுமைதனும்!
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்!
அதனுடன் சிலராகும்!
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்!
வெறுமையின் நினைவோடும்!
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே!
காற்றினை உள்நிறுத்தும்!
03.!
நட்பு! -பிரிந்தபின் கூடல்!
--------------------------------!
இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்!
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை!
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்!
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை!
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்!
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே!
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு!
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே!
மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்!
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே!
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ!
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ!
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்!
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே!
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது!
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே!
எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு!
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே!
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்!
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே!
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது!
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு!
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்!
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்!
எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக!
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே!
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்!
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே!
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு!
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே!
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன!
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.