தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வெற்றியை உன் இலக்காக்கு

லலிதாசுந்தர்
தன்னம்பிக்கை மனிதனின்!
முதுகெலும்புகள் அல்ல!
உயிர் நாடிகள்!
தோல்விகளை தூக்கியெறியாதே!
அவற்றை உன்னுள் புதைத்துவிடு!
அவைகளே உன்னை வெற்றியை!
நோக்கி செலுத்த உதவும் கருவிகள்!
தோல்விகள் அவமானங்கள் அல்ல!
அவைகள் உன் முயற்சியை!
அளக்க உதவும் அளவுகோல்கள்!
நூறுமுறை தோற்றாலும் முயற்சிசெய்!
நூற்றியொன்றாவது முறை வெற்றி!
கிடைக்குமென்ற நம்பிக்கையுடன்!
தோல்விகளால் துவண்டுபோனதாக!
விலங்குகளுக்கு கூட வரலாறில்லை .!
போராடு உன் இலக்கை!
அடையும் வரை போராடு

நகையே

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
அக்கா வரும்போதெல்லாம் !
நடக்க வேண்டியிருக்கிறது !
அடகு கடைக்கு. !
தங்கச்சிக்காகவும் இனி !
தனியாக வாங்கிச்சேர்க்கணும். !
கல்லூரிக்கனவில் !
மூழ்கியிருக்கும் தம்பிக்கு !
கைகொடுக்க காத்திருக்கும் !
அம்மாவின் தாலிக்கொடி. !
இன்னமும் மீட்கப்படவேயில்லை !
அண்ணனின் பயணத்திற்கு வைத்த !
அண்ணியின் வளையல்களும் !
அவளுடைய வாழ்க்கையும்! !
அணிவதற்கன்று; !
அவசரத்திற்கென்று !
ஆகி விட்ட உனக்கு !
நல்ல பெயர் தான் !
நகையே! !
!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) !
+966 050 7891953

புதிதாய்ப் பிறப்போம்

சித. அருணாசலம்
வாழ்க்கையின் அடுத்த படியில்!
வழுக்காமல் செல்வதற்கு,!
செறிவாய் நம்மை!
செதுக்கிக் கொள்வதற்கு!
எண்ணங்களை உளியாக்கி !
உள்ளங்களைக் கையாளும் நேரமிது.!
பிறர் காணமுடியாமல்!
மூடி வைத்திருக்கும் முகத்திற்குள் !
வேறுபாட்டைக் களைவோம்.!
முகத்திற்குப் போடுகின்ற ஒப்பனையை!
முக்காடிட்ட உள்ளத்திற்கு!
முழுவதுமாய்ப் போடுவோம்.!
நாக்கைத் திருப்திப்படுத்த!
உயிர்களை வதைக்கின்ற!
போக்கை மாற்றிக் கொள்வோம்.!
வழக்கத்தில் அரிதாகிப் போன!
வாக்குச் சுத்தத்திற்க்கு!
வழி வகுத்துக் கொடுப்போம்.!
வேறுபாடு தழைத்தோங்க!
வேரூன்றிய வேண்டாதவற்றை!
மாறுபாடு காணாதொழிப்போம் - இங்கே!
கூறுபோட்டு மனிதர்களைக்!
சோறுதேடும் கூட்டமாக்கியோரைச்!
சொல்லால் சுட்டொழிப்போம்.!
சமுதாயச் அவலங்களைச்!
சந்தி சிரிக்க வைப்பதற்கு!
பாரதியார், பாவேந்தர், !
பண்பாளர் பட்டுக்கோட்டை போல்!
புத்தியில் ஏற்றி வைப்போம் - இதற்காய்!
புதிதாய்ப் பிறந்து பார்ப்போம்.!
!
-சித. அருணாசலம்

இயற்கை

இமாம்.கவுஸ் மொய்தீன்
அண்டங்கள் ஆகாயங்கள்!
இயற்கை!!
வானும் விண்மீன்களும்!
இயற்கை!!
சூரியனும் ஒளியும்!
இயற்கை!!
அதைச் சுற்றிவரும் கிரகங்கள்!
இயற்கை!!
நேரமும் காலமும்!
இயற்கை!!
மேகமும் மின்னலும்!
இயற்கை!!
காற்றும் மழையும்!
இயற்கை!!
நீரும் நிலமும்!
இயற்கை!!
நிலநடுக்கமும் எரிமலைகளும்!
இயற்கை!!
ஆறுகள் கடல்கள் அருவிகள்!
இயற்கை!!
வறட்சியும் பசுமையும்!
இயற்கை!!
உயிரினங்கள் அனைத்தும்!
இயற்கை!!
அவற்றின் பிறப்பும் இறப்பும்!
இயற்கை!!
உயிரும் உடலும்!
இயற்கை!!
இரவும் பகலும்!
இயற்கை!!
உறக்கமும் விழிப்பும்!
இயற்கை!!
பசியும் தாகமும்!
இயற்கை!!
அன்பும் பாசமும்!
இயற்கை!!
இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்!
இயற்கை!!
அவற்றின் மாட்சியும் மகிமையும்!
இயற்கை! இயற்கை!!!
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

உனக்கொரு கேள்வி

ஜான் பீ. பெனடிக்ட்
உன்!
சிரிப்பொலி சத்தம் கேட்டு!
இவ்வாண்டின்!
சிறந்த இசையமைப்பாளராக!
உனைத் தேர்வு செய்துள்ளது!
தமிழ்நாடு அரசு!
என் இதயத்தைக்!
கிழித்துப் போட்டுத்!
தலைமறைவான!
கொலைக்காரி!
உன்!
கூந்தல் வாசம் நுகர்ந்து!
மூன்றே நிமிடத்தில்!
உன் பட்டுக் குஞ்சம்!
கவ்வி நின்றது!
போலீஸ் மோப்ப நாய்!
அயர்க்கும்!
அக்னி வெயிலில்!
அசைந்தாடி நடந்துவரும்!
உன்!
நிழலின் குழுமையில்!
குளிரால் நடுங்கி நிற்கிறது!
குளுகுளு வேம்பு!
ஏண்டி!
தெரியாமல் தான் கேட்கிறேன்...!
பிரம்மன் என்ன உன்!
பினாமியா?!
ஜான் பீ. பெனடிக்ட்

மனசு

நளாயினி
அதெப்படி இருக்கும்?!!
ஆராய்ச்சி ஏதும்!
இதுவரை செய்யதில்லை.!
ஆனாலும் நான்!
ஒரு போதுமே!
அதை எடுத்து!
தொட்டுப் பார்த்ததுமில்லை!
உணர்ந்து!
படித்ததுமில்லை.!
எங்காவது தன்னை மறைத்தபடி!
இந்த உடம்புள்!
எந்த இடுக்குகளுக்குள்!
இதுவரை இருந்திருக்கும்.!!!!
இப்போதாவது!
கண்டெடுத்தேனே!!!
காமக்கிளர்வுகள் ஏதுமின்றி!
உன்பாதச்சுவடுகளையும்!
நினைவுகளையம்!
சி£¤ப்பொலிகளையும்!
துன்பங்களையும்!
தாங்கியபடி!!!
நட்பா ? காதலா?!
பி£¤த்தப்பார்க்க முடியவில்லை.!
எப்படி வேண்டுமானாலும்!
இருந்து விட்டுப்போகட்டும்.!
இப்போவதாவது கண்டு பிடித்தேனே!
உன் நினைவுகளோடு.!
--------------------------------!
நளாயினி தாமரைச்செல்வன்!
சுவிற்சலாந்து.!
15-01-2003

தேய்பிறை

TKB காந்தி
உன் பயணச்சீட்டு!
உன் எச்சில் பருக்கை!
நீ சீவிய சீப்பு!
நீ பிடித்த பேனா!
நீ சொல்லும் 'All the best'-களை!
சேகரித்த பின்னொருநாளில் மணம்முடித்தோம்.!
சில வருட கொஞ்ஜல்களின் பின் இப்போதெல்லாம்!
ஒரே வீட்டிலிருந்தாலும்!
நம்மிருவருக்குமான நேரம் மெல்ல இறந்துவிட்டிருக்கிறது!
வேலைகள் முடிந்தபின்னும் ஏதோ வேலையில் நான்.!
பேச நேரம் இருந்தாலும்!
தலைப்பு நினைவிலில்லாத புத்தகத்தில் என் கண்கள், மனம் வேறெங்கோ!!
என்மீது உனக்கான உமிழ்தல்கள் இன்னும் அதிகமிருக்கலாம் அல்லது!
என்னை உருக்கிவிடும் அமிலத்தை!
உன் மனம் உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.!
மரத்தின் காய்ந்த இலையாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது!
எப்படியோ பழசாகிவிட்ட நம் உறவு!!
காதலின் ஊடல்களைவிட!
அந்தரங்கத்தின் வலி மிகுந்தது நம் திருமணம்.!
-TKB காந்தி

ஒரு துளியாய்

இளந்திரையன்
இளந்திரையன் !
!
ஒற்றைச் !
சபலத்தின் !
ஓர வெடிப்பில் !
விம்மிப்பரவும் !
பெருவெளியில் !
ஒரு துளியாய் !
மூடிய !
சிப்பியின் !
முதுகில் வழியும் !
நீர்த் தாரையாய் !
நீளும் !
கற்பங்களை !
நிமிர்த்திக் !
கழியும் !
பிரயத்தனத்தில் !
பகலும் இரவும் !
பாதித் !
தூக்கமும் !
பசியுமான !
விளங்கமுடியா !
மர்மத்தின் !
முடிச்சில் !
காலடி தெரியா !
கற்பத்தின் !
இருட்டைப்போல் !
காலக் !
கணிதத்தின் !
கழித்தலிலும் !
கூட்டலிலும் !
சுற்றிச் சுழலும் !
புழுவைப்போல !
நகர்ந்து போக !
நீள்கிறது !
வாழ்க்கை

நினைவில் விரியும் கிளைகள்

அ. விஜயபாரதி
வேலிக்கருவை மர இலைகளும்!
கருவேல மரப் பூக்களும்!
கீரைப் பொரியலாய்!
கொட்டாங்குச்சியில்!
மணத்துக் கொண்டிருக்கும்!
இளம்பிராயத்தில் எழுப்பிய!
மணல் வீட்டுக்குள்!
எப்போதாவது!
கோயில் ஆலமரத்தில்!
குடியேறும்!
வழிதவறிய குரங்கிற்கு!
மிளகாய்ப் பொடி தூவிய!
வாழைப்பழத்தோடு!
காசுக்கு வாங்கிய நாவல் பழங்களைத்!
தின்றத் கொடுத்து!
அதன் மலத்தில் நெளியும்!
புழுக்களில் உணர்ந்தோம்!
கீரிப்பூச்சிகளின் நச்சரிப்பை!
வாகை மரங்களுக்குத்!
தலைகால்!
புரிவதில்லை போலும்!
பூக்களையே!
குஞ்சங்களாய் சூடியிருந்தவை!
இலையுதிர்த்து விட்டு!
காற்றின் நட்டுவத்திற்கு!
ஜதி செய்து கொண்டிருக்கிறது!
தலையில் சலங்கையணிந்தபடி!
ஆண்டாண்டு காலமாய்!
நிழற்கிளை விரித்து!
இனிக்கும் பழங்களை உலுக்கிய!
பாதையோரப் புளியமரத்தை!
வெட்டிய பள்ளத்தில்!
மழைநீர் தேங்கும்!
கோடையில்!
வெயில் வேரூன்றி!
வெக்கை பரப்பி நிற்கும்!
புங்கமரம்!
பூத்துக் குலுங்கியதால்!
உதிர்ந்த மொட்டுக்களை!
ஆட்காட்டி விரலசைத்து!
நட்சத்திரமெண்ணுவது போல!
ஒன்றிலிருந்தே மீண்டும் மீண்டும்!
தொடங்குகிறேன்!
ஒரு பகல்கனாவில்!
மல்லாந்து படுத்தபடி!
நிழலில் மட்டும்!
கசப்பை இறக்கி வைக்காத!
வேப்பமரக் கிளைதனில் !
நித்தம் நண்பகல் வந்தமரும்!
இரு மைனாக்கள்!
உடல் சிலிர்ந்து இறகு கோதி!
ஒருவித லயத்தில் சப்தித்தவை!
இன்றெந்தன் சாளரத்தில்!
வாசம் பண்ணவில்லை!
சாரல் கதவாயிருக்கிறது!
அணிலின் நகங்களும்!
காற்றின் விரல்களும்!
கொய்து தரையிலிறைத்த !
மஞ்சள் கொன்றைகளைப்!
பார்க்கும் கணம்!
எவளொருத்தியின் நினைவில்!
விளக்கமாறு வரவில்லையோ!
அவளுடன் நான்!
தண்டவாளங்கள் சந்திக்கும்!
மாயப்புள்ளியில்!
தாயம் ஆடிக் கொண்டிருப்பேன்!
அ. விஜயபாரதி

நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
கவிஞர் ஈழநிலா !
பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!!
படுபாவிகளி களினாலே அழியுதடா சாமி!!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’! !
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து’ காமி!!
நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி’யென் றடைப்பார்!
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!!
கண்ணிவெடி ‘கிளைமோரில்’ கால்பறந்து சாவோம்!!
கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!!
பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!!
புல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்!
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!!
எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்’ உரித்தான்!!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!!
ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்