ஒரு வேண்டுகோள் - முத்தாசென் கண்ணா

Photo by Ramona Kudure on Unsplash

ஒரு !
கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை !
குனிந்து எடுத்த நொடியில் !
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன !
சில பார்வைகள் !
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில் !
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத் !
தேடிக் கொண்டிருந்தன !
சில பார்வைகள் !
கை வைத்து மறைப்பதைக் கூட !
அவமானப்பட்டுச் செய்கிறேன்!
முன்னாலே போமா என்று!
பின்னாலே தடவிவிட்டு போகும் !
நடத்துனர்!
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால் !
மகளிர் இருக்கையின் இடுக்குகளில் !
கூனிக்குறுகி என்னைப் போலவே !
சில திரௌபதிகள் !
ஒவொரு நிறுத்ததிலும் !
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை !
ஆண்டவா! !
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்!
ஆனால் அடுத்த பிறவியில் !
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை!
-முத்தாசென் கண்ணா
முத்தாசென் கண்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.