மறு நடவு - அகரம் அமுதா

Photo by Paweł Czerwiński on Unsplash

கவிஆக்கம்: அகரம் “அமுதா” !
அப்பன் குறும்பாலே !
அன்னையினுள் முதல் நடவு !
தொப்பூழ் கொடியவிழத் !
தொட்டிலிலே மறு நடவு !
தாய்மொழியக் கற்கின்ற !
வாய்மொழி முதல் நடவு !
தாய்மொழியாய் பின்னாளில் !
வாய்த்தமொழி மறு நடவு !
பிள்ளையினுள் வெள்ளை மனம் !
பேரிறைவன் முதல் நடவு !
கள்ள குணம் ஆசை மனம் !
காலத்தின் மறு நடவு !
!
பள்ளியிலே பாடங்கள் !
பாலகனில் முதல் நடவு !
பள்ளியறைப் பாடங்கள் !
பருவத்தின் மறு நடவு !
எண்ணத்தை நெஞ்சுள்ளே !
எழுதுதல் முதல் நடவு !
கண்துஞ்சும் வேளைவரும் !
கனவுகள் மறு நடவு !
உற்றுணர்ந்த யாவையுமே !
உள்ளத்தில் முதல் நடவு !
கற்பனையில் கண்டெடுக்க !
காகிதத்தில் மறு நடவு !
எமுத்துக் கல்வியினால் !
இமை திறத்தல் முதல் நடவு !
பழுத்த அனுபவத்தால் !
பார்வைபெறல் மறு நடவு !
வயதில் செய்கின்ற !
வன்முறைகள் முதல் நடவு !
வயதானப் பின்னாலே !
வளைந்து கொடல் மறு நடவு !
பிள்ளையில் தாய்கரத்தைப் !
பிடித்துலவல் முதல் நடவு !
தள்ளாடும் முதுமையிலே !
தடியூணல் மறு நடவு !
கருவறையில் முதல் நடவு !
கண்ணறையில் கையணைப்பில் !
இருப்பதெல்லாம் மறு நடவு !
இறப்(பு)அது அறுநடவு! !
கவிஆக்கம்: அகரம் “அமுதா” !
006592468200
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.