சிலேடை வெண்பாக்கள்! -(III) - அகரம் அமுதா

Photo by Tengyart on Unsplash

சிலேடை வெண்பாக்கள்! - (III)!
!
01.!
பம்பரமும், செக்கும்!!
------------------------!
ஓரச்சில் ஊண்றிச் சுழலுதலால்; கொண்டபொருள்!
கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்!
காட்டுமரச் செக்கின்நேர் காண்!!
!
02.!
பம்பரமும், பாம்பும்!!
-------------------------!
மூச்சிரையும்; நின்று தலையாட்டும்; முன்கோபப்!
பாய்ச்சலிட்டே கொத்திப் பதம்பார்க்கும்; -பேச்சென்ன!
வட்டமிடும் ஆகையால் பம்பரமும் நற்பாம்பும்!
இட்டமுடன் நேரென் றிரு!!
!
03.!
ஆழியும், மாந்தரும்!!
--------------------------!
ஈகை குணமுளதால்; இவ்வுல காளுதலால்;!
வாகாய் ஒலிசெயும்நா வாயுளதால்; -ஆகாயம்;!
சாருதலால்; சாற்றுங்கால் உப்பிடுந் தன்னையால்!
வாரிதிநேர் மாந்தர் வழுத்து!!
!
04.!
தோசையும், கோலமும்!!
----------------------------!
பெண்கள்கை போடும்; அரிசிமா கொண்டாகும்;!
கண்கள்போற் புள்ளிபல காணுமதைத் -தின்றுபசி!
தீர்க்கும் பலஉயிரும் என்பதனால் தோசையின்!
நேர்கோலம் என்றே நவில்!!
-அகரம்.அமுதா
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.