முகநூல் காலம் .. இக்கரைக்கு அக்கரை ..என்ன சாதித்தோம்? ..காதல் தோல்வி !
01.!
முகநூல் காலம் !
----------------------------!
ஒத்த கருத்துடையவர்கள் !
உலகில் எந்தமூலையில் இருந்தாலும் !
நட்பு பாராட்ட !
ஒரு நிமிடமே ஆகிறது!. !
02.!
இக்கரைக்கு அக்கரை !
-------------------------------!
கோவணம் கட்டிக்கொண்டு !
வயலில் வேலைசெய்யும் கிழவனை !
ஆச்சரியமாய் பார்த்து !
புகைப்படம் எடுத்துதள்ளுகிறான் !
டவுசர் போட்டிருக்கும் வெளிநாட்டுக்காரன்! !
03. !
என்ன சாதித்தோம்? !
---------------------------!
பசுமை நிறைந்த காட்டை !
பகையென நினைத்து வெட்டினோம்! !
வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய் !
வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்! !
வீட்டின் கொல்லையில் கத்தும் !
கிளியை துரத்திவிட்டு !
தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்! !
நம் குழந்தைகள் !
செல் தீர்ந்து போன பொம்மைகளோடு !
விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் !
தனிமையாய்!. !
04. !
காதல் தோல்வி !
----------------------!
மாலை வேளையில் தூக்கியெரியும் !
நீ சூடிவாடிய மல்லிகையுடன் !
என்காதலும் குப்பைக்கு போனதை !
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை
ந.ஜெகதீஸ்வரன், காட்டுப்புத்தூர்